அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்ற பெண் சாவு


அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்ற பெண் சாவு
x

நெல்லையில் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்ற பெண் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி முத்துலட்சுமி (வயது 45). இவர் நேற்று திடீரென அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்றதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி உயிரிழந்தார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story