விருத்தாசலத்தில்ஓட்டல் மாடியில் பெண் ஊழியர் பிணம்போலீசார் விசாரணை


விருத்தாசலத்தில்ஓட்டல் மாடியில் பெண் ஊழியர் பிணம்போலீசார் விசாரணை
x

விருத்தாசலத்தில் உள்ள ஒரு ஓட்டல் மாடியில் பெண் ஊழியர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்

விருத்தாசலம்,

ஓட்டல் ஊழியர்

விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் வடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்புலிங்கம் மனைவி தனபாக்கியம் (வயது 62). இவர் விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஓட்டல் மாடியில் தனபாக்கியம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தனபாக்கியம் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், தனபாக்கியம் ஓட்டல் மாடியில் சுற்றித்திரிந்த குரங்குகளை விரட்டியபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

காரணம் என்ன?

இதையடுத்து போலீசார், தனபாக்கியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனபாக்கியம் இறந்ததை அறிந்து ஓட்டலுக்கு வந்த அவருடைய உறவினர்கள் தனபாக்கியம் சாவில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக கூறினர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாக்கியம் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story