மின்னல் தாக்கி அரசு பெண் ஊழியர் பலி
அம்பையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது மின்னல் தாக்கியதில் அரசு பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
அம்பை:
அம்பை முடப்பாலம் காலனி தெருவை சேர்ந்தவர் சுடலை. இவருைடய மனைவி வெள்ளையம்மாள் (வயது 51). இவர் அம்பை ஊர்க்காட்டில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தினமும் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள வயல்வெளி வழியாக நடந்து வீட்டுக்கு வருவது வழக்கம்.
நேற்று மாலை வேலை முடிந்ததும் வெள்ளையம்மாள் வழக்கம்போல் வயல்வெளி வழியாக நடந்து வந்தார். அப்ேபாது திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சென்று திரும்பியபோது மின்னல் தாக்கியதில் அரசு பெண் ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.