பெண் வக்கீலை செல்போனில்படம் பிடித்தவர் கைது


பெண் வக்கீலை செல்போனில்படம் பிடித்தவர் கைது
x

பெண் வக்கீலை செல்போனில் படம் பிடித்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு அந்த ஓட்டலில் நெல்லையை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது குடும்பத்துடன் சாப்பிட சென்றார். அப்போது அந்த பெண் வக்கீலை முருகன் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகனை கைது செய்தனர்.


Next Story