பெண் சாராய வியாபாரி கைது


பெண் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

விழுப்புரம்

விழுப்புரம்

திண்டிவனம் தாலுகா மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை மனைவி மீனாட்சி (வயது 40). இவர் மீது கிளியனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில வாரத்துக்கு முன்பு சாராய வழக்கில் மீனாட்சியை கிளியனூர் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.

இதை ஏற்று கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் மீனாட்சியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story