பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனார்.

கரூர்

குளித்தலை,

குளித்தலை அருகே உள்ள வேளாங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). இவரது மனைவி காவியா (22). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த தம்பதி 2 பேரும் நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த வாரம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை கோவில் சித்திரை திருவிழா என்பதால் அவர்கள் நாமக்கல்லில் இருந்து வேளாங்காட்டுப்பட்டிக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று காவியா குளித்தலையில் உள்ள தையல் கடைக்கு செல்வதாக தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து செல்வராஜ் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் மனைவியை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மனைவி மாயமானது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story