பெண் தபால் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தபால் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
x

உளுந்தூர்பேட்டையில் பெண் தபால் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் அஞ்சு(வயது 22). இவர் உளுந்தூர்பேட்டை கணேசனார் தெருவில் உள்ள ஏழுமலை என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து கடலூர் மாவட்டம் பாலக்கொல்லை பகுதியில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அஞ்சு அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் அஞ்சுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அஞ்சு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story