பெண் கைதி திடீர் சாவு
வேலூர் மத்திய ஜெயிலில் பெண் கைதி திடீரென இறந்தார்.
வேலூர்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள உக்கல் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 40). இவர் கடந்த 2017-ம் ஆண்டு குற்ற வழக்கு ஒன்றில் தூசி போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சில நாட்களில் சுமதிக்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 5 ஆண்டுகளாக தொடர் சிகிச்சை பெற்று வந்த சுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுமதி உயிரிழந்தது குறித்து அவரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story