விரல் ரேகை நிபுணர் தேர்வில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சாதனை

விரல் ரேகை நிபுணர் தேர்வில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சாதனை
x

அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் சாதனை படைத்த திருவண்ணாமலை பெண் சப்-இன்ஸ்பெக்டரை டி.ஐ.ஜி., பேலீஸ் சூப்பிரண்டு பாராட்டினர்.

திருவண்ணாமலை

அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் சாதனை படைத்த திருவண்ணாமலை பெண் சப்-இன்ஸ்பெக்டரை டி.ஐ.ஜி., பேலீஸ் சூப்பிரண்டு பாராட்டினர்.

திருவண்ணாமலை மாவட்ட விரல் ரேகை சிறப்பு பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேவிபிரியா பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய விரல் ரேகை நிபுணர் தேர்வில் பங்கேற்றார்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 2 -ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி பிரியாவை வேலூர் சரக டி.ஐ.ஜி.முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருவண்ணாமலை மாவட்ட விரல் ரேகை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்தி பாராட்டினர்

Next Story