பெண் தற்கொலை
பனவடலிசத்திரம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பனவடலிசத்திரம்:
சங்கரன்கோவில்-நெல்லை செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் விரைந்து சென்று, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், அந்த பெண் சங்கரன்கோவில் பாரதியார் நகர் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி பேச்சியம்மாள் (வயது 37) என்பது தெரியவந்தது. குடும்பத்தகராறு காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டை விட்டு வெளியே சென்ற பேச்சியம்மாள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.