பெண் தற்கொலை
ஓசூர்:-
ஓசூரில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 54). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகாமேரி (54). சகாயராஜூக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த சிகிச்சைக்கு பிறகு சகாயராஜூக்கு நடக்க முடியாமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் வேலைக்கு செல்ல முடியாமலும், குடும்பத்தை நடத்த முடியாமலும் மல்லிகா மேரி சிரமப்பட்டு வந்துள்ளார்.
தற்கொலை
இதனால் மன வருத்தத்தில் இருந்த மல்லிகா மேரி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மல்லிகா மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மல்லிகா மேரி தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.