தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி பச்சையம்மாள்(வயது 35). மாரிமுத்து கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். பச்சையம்மாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பச்சையம்யமான் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story