தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

அருப்புக்கோட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி திருமனி (வயது 41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகன் சந்தோஷ் குமார் டியூசன் செல்லாததால் அய்யப்பன் தனது மனைவியை சத்தம் போட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த திருமனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமனி உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story