தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

குடவாசல் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள அருவீழிமங்கலம் வடக்கு மலையான் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (வயது34). இவருக்கு நீண்ட காலமாக சளி மற்றும் நுரையீரல் பிரச்சினை இருந்து வந்துள்ளது.இதனால் மனமுடைந்த சித்ரா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சித்ராவின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story