பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் ராயனுரை சேர்ந்தவர் தர்மராஜேஸ்வரன். இவரது மனைவி யோகலதா (வயது 36). இந்தநிலையில் தர்மராஜேஸ்வரன் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மணமுடைந்து காணப்பட்ட யோகலதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, யோகலதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story