தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

விருதுநகரில் தூக்குப்ேபாட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்


விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 38). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்ட நிலையில் சீதாலட்சுமி தனது மகன் கருப்பசாமி என்பவருடன் இருந்து வந்தார். கருப்பசாமி சுண்டல் கடையில் வேலை பார்த்துவரும் நிலையில் சீதாலட்சுமி வீடுகளில் வேலைகள் செய்து வந்தார். கருப்பசாமியிடம் செலவுக்கு அதிக பணம் கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கருப்பசாமி தனியாகச் செல்ல ஏற்பாடு செய்ததால் அதனை சீதாலட்சுமி தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த சீதாலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Next Story