தூக்குப்போட்டு பெண் தற்கொலை
சோழவந்தான் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகன். இவருடைய மகள் தேன்மொழி (வயது 22). இவருக்கு திருமணம் நடந்து 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது அப்பா வீட்டில் வசித்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தேன்ெமாழி தூக்கில் தொங்கினார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story