பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமயபுரம்:
மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள வாழ்மால் பாளையம் கீழூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. சரண்யாவிற்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மேலும் அவருக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் சரண்யாவிற்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதை அறிந்த அவரது உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இதுகுறித்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.