தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

கடமலைக்குண்டு அருகே உள்ள அய்யனார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 31). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறின் போது முருகேஸ்வரி கோபித்து கொண்டு குழந்தையுடன் அதே கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

கணவர் மீண்டும் வந்து அழைத்து செல்லாததால் முருகேஸ்வரி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story