தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தேனியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
தேனி கே.ஆர்.ஆர். நகர் 4-வது தெருவை சேர்ந்த பரமன் மகள் வினிதா (வயது 24). இவருக்கும் கம்பத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செல்வக்குமார் இறந்து விட்டார். இதனால், வினிதா தேனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவருடைய தாய் பாலாமணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story