தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்
மதுரை
சோழவந்தான்
சோழவந்தான் அருகே கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பல்லாக்கு. இவருடைய மனைவி விமலா (வயது 35). இவருடைய கணவர் பல்லாக்கு அடிக்கடி குடிபோதையில் வந்து விமலாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் மனவேதனை அடைந்த விமலா நேற்று முன்தினம் தோட்டத்துக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. இந்த நிலையில் நேற்று தோட்டத்துக்கு சென்று பார்த்த போது அங்குள்ள மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story