தூக்குப்போட்டு பெண் தற்கொலை; கணவர் கைது


தூக்குப்போட்டு பெண் தற்கொலை; கணவர் கைது
x

வடகாடு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

வடகாடு அருகேயுள்ள கடுக்காக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை பர்னாந்து (வயது 38). இவரது மனைவி ஆரோக்கிய மேரி (31). இவர் கடந்த ஜூன் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. மற்றும் ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்து ஆரோக்கிய மேரியின் கணவரான குழந்தை பர்னாந்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story