பெண்ணை கழுத்தை இறுக்கிக்கொன்ற மகன், மகள், மருமகன்
கழுத்தை இறுக்கி ெபண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மகன், மகள், மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பனைக்குளம்,
கழுத்தை இறுக்கி ெபண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மகன், மகள், மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாக்குவாதம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வலையர்வாடி நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி ஜெயா(வயது 52). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி ராமேசுவரத்தில் வசித்து வருகிறார். மற்றொரு மகள் திவ்யா(26), இவருடைய கணவர் ராஜூ(32), திவ்யாவின் தம்பி வேல்முருகன்(24) ஆகியோர் வலையர்வாடி நாடார் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஜெயா கடந்த சில நாட்களாக தனது பிள்ளைகளை அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் ஜெயாவை கண்டித்தனர்.
சம்பவத்தன்று ஜெயா மீண்டும் தனது பிள்ளைகளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திவ்யா, வேல்முருகன் ஆகியோர் தாய் ஜெயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கழுத்தை இறுக்கி கொலை
அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த திவ்யா, வேல்முருகன், ராஜூ ஆகியோர் சேர்ந்து ஜெயாவை கீழே தள்ளினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஜெயாவை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. திவ்யாவும், ராஜூவும் சேர்ந்து இந்த கொலையை மறைத்து ஜெயா இயற்கை மரணம் அடைந்ததாக நாடகமாட முயன்றதாக தெரிகிறது.
இதற்கிைடயே வேல்முருகன் இந்த கொலை தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரியிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக திவ்யா, ராஜூ, வேல்முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.