குறுவை நெற்பயிர்களுக்கு டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பணி


குறுவை நெற்பயிர்களுக்கு டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பணி
x

திருமருகல் அருகே மேலப்பூதனூரில் குறுவை நெற்பயிர்களுக்கு டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பணி நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே மேலப்பூதனூரில் குறுவை நெற்பயிர்களுக்கு டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பணி நடந்தது.

டிரோன் மூலம் உரம் தெளிப்பு

நாகை மாவட்டம் திருமருகல் அருகே மேலப்பூதனூரில் குறுவை நெல் பயிர்களுக்கு டிரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் செயல் விளக்கம் நிகழ்ச்சி கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

மேலப்பூதனூர் கிராமத்தில் ஒரு முன்னோடி விவசாயி தனது நிலத்தில் குறுவை சாகுபடி செய்துள்ளார். குறுவை நெற்பயிர்களுக்கு டிரோன் மூலம்நானோ யூரியா என்ற உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நானோ யூரியா

டிரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்பதால் குறைவான நேரத்தில் அதிக பரப்பில் தெளிக்க முடியும்.தற்சமயம் ஆள் பற்றாக்குறையை போக்க டிரோன் முறை பயன்படுத்தலாம். டிரோன் மூலம் ஒரு ஏக்கருக்கு 5 நிமிடத்தில் நானோ யூரியா உரம் தெளிக்க முடியும்.

புதிய தொழில்நுட்பமான திரவம் முறையில் காணப்படும் நானோ யூரியா பயன்படுத்தும் முறையினால் சராசரியாக 8 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

விழிப்புணர்வு செயல் விளக்கம்

நானோ யூரியா வயல்வெளிக்கும் எடுத்து செல்வது எளிது.நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

---

---


Next Story