உரங்கள் தட்டுப்பாடின்றி மானிய விலையில் வழங்க வேண்டும்


உரங்கள் தட்டுப்பாடின்றி மானிய விலையில் வழங்க வேண்டும்
x

குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை

குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரவை கூட்டம்

மயிலாடுதுறை மாப்படுகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டப்பேரவைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்டக்குழு உறுப்பினர் மேகநாதன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராமலிங்கம் வரவேற்றார். வட்டக்குழு உறுப்பினர் வேம்பு சங்கக் கொடியினை ஏற்றினார். மாவட்ட தலைவர் சிம்சன் பேசினார். வட்ட செயலாளர் ராயர் வேலை அறிக்கை படித்தார். மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் மணி ஆகியோர் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கடன் வழங்க வேண்டும்

விவசாய விளைபொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன் வழங்க வேண்டும்.

பி.எம்.கிஷான் நிதி உதவி திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6000-த்தை கோவில், மடம், அறக்கட்டளை, ஆதீனம் ஆகியவைகளுக்கு சொந்்தமான நிலத்தில் விவசாயம் செய்யும் குத்தகை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

மானிய விலையில் உரங்கள்

குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story