விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க வேண்டும்


விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க வேண்டும்
x

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனைக்கூட்டம்

தலைஞாயிறில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் வீரமணி, எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார துணை தலைவர் நடேசன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நாகை மாவட்ட கடைக்கோடி பகுதியான தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறுவை தொகுப்பு திட்டம்

தலைஞாயிறு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 500 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டத்தில் பொருட்கள் வழங்க வேண்டும்.

வேளாணிமுந்தல், பழையாற்றங்கரை, சேரன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தலைஞாயிறு வேளாணிமுந்தல் பகுதியில் காங்கிரஸ் கட்சி் கொடியை விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் ஏற்றி வைத்தார்.


Next Story