ஆதினமிளகி அய்யனார் கோவில் படைப்பு விழா


ஆதினமிளகி அய்யனார் கோவில் படைப்பு விழா
x

ஆதினமிளகி அய்யனார் கோவில் படைப்பு விழா நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே மருதங்குடியில் உள்ள ஆதினமிளகி அய்யனார் கோவிலில் உள்ள நாச்சாரம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெண்ணடி படைப்பு விழா நடைபெற்றது. இந்த விழா 3 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா நடைபெற்றது. விழாவில் மூலவர் ஆதினமிளகி அய்யனார், நாச்சாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை பெண்கள் மாவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர். இரவு கிடா வெட்டு பூஜை மற்றும் கறி விருந்து நடைபெற்றது. இதில் விராச்சிலை தெற்கு கரையை சேர்ந்த ஏழுர் பத்து கொரட்டியார் வகை பெண் பிள்ளைமார்கள், மருதங்குடி, கொரட்டி, ஒ.சிறுவயல், பாதரக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த வேளார் வம்சாவளி பங்காளிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Related Tags :
Next Story