தர்கா கந்தூரி விழா கொடியிறக்கம்


தர்கா கந்தூரி விழா கொடியிறக்கம்
x

ஜாம்புவானோடை தர்கா கந்தூரி விழா கொடியிறக்கம் நடந்தது

திருவாரூர்

ஆலத்தம்பாடி;

முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜாம்புவானோடை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக சந்தனம் பூசும் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. நேற்று முன்தினம் இரவு கொடியிறக்கம் நடந்தது. இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தர்கா பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ். எஸ். பாக்கர் அலி சாஹிப் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story