நாகலூரில் விழா மேடை
நாகலூரில் விழா மேடையை செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தியாகதுருகம்:
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் நாகலூரில் விழா மேடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, விழா மேடையை திறந்து வைத்தார்.
தியாகதுருகம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் பாஷா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி இணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய இணை செயலாளர் சாமிதுரை வரவேற்றார். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் பாண்டுரங்கன், வெங்கடேசன், மாவட்ட விவசாய பிரிவு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அம்மாபேரவை செயலாளர் செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் அழகுவேல், முன்னாள் ஏரி பாசன சங்க தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ராமன், சிங்காரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.