மைசூரு-தூத்துக்குடி இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்கண்ட பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்கண்ட பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்.
- எஸ்வந்த்பூர்-திருநெல்வேலி(வண்டி எண்: 06565) இடையே மதியம் 12.45 மணிக்கு செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் பண்டிகை கால வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 18-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் இயக்கப்படும்.
- மறுமார்க்கமாக திருநெல்வேலி-எஸ்வந்த்பூர்(வண்டி எண்: 06566) இடையே காலை 10.40 மணிக்கு புதன்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் பண்டிகை கால வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 19-ந்தேதி மற்றும் 26-ந்தேதிகளில் இயக்கப்படும்.
- மைசூரு-தூத்துக்குடி(06253) இடையே மதியம் 12.05 மணிக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் பண்டிகை கால வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி இயக்கப்படும்.
- மறுமார்க்கமாக தூத்துக்குடி-மைசூரு(06254) இடையே மதியம் 3 மணிக்கு சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் பண்டிகை கால வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Related Tags :
Next Story