வள்ளி-தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சாமி திருக்கல்யாணம்
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நேற்று வள்ளி- தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நேற்று வள்ளி- தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கந்தசஷ்டி, சூரசம்ஹார திருவிழா
உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இங்கு கந்தசஷ்டி, சூரசம்ஹாரத்திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி தினசரி காலை 7 மணி முதல் 10 மணி வரை யாக சாலை வேள்வி பூஜை, அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நிகழ்ச்சிகளும், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை உற்சவர் சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை சாமி புறப்பாடு, கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
திருக்கல்யாணம்
இதைத்தொடர்ந்து நேற்று காலை வள்ளி- தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாண உற்சவம், சிறப்பு பூஜைகள், மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. இரவு 7 மணிக்கு வெள்ளி ரதத்தில் சாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ம.அம்சவேணி, தக்கார் சி.தீபா மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.