55 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டு


55 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டு
x
தினத்தந்தி 24 Sept 2023 4:00 AM IST (Updated: 24 Sept 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 55 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

தேனி

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 வார்டுகளில் 55 படுக்கை வசதிகளுடன் கூடிய 24 மணிநேர காய்ச்சல் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என தனித்தனியாக படுக்கை வசதிகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் திருநாவுக்கரசு கூறியதாவது,

தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை பிரிவில் கொசுவலையுடன் கூடிய 55 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதில் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்கு உள்ளானால் பெரியவர்களுக்கு 20 படுக்கைகள் குழந்தைகளுக்கு 20 படுக்கைகள் கொண்ட வார்டும், நிபா வைரஸ் சிகிச்சைக்கு 15 படுக்கையுடன் கூடிய வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி உள்ள பொதுமக்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று கொள்ளலாம். இதேபோல் தேனி மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் தேனி மாவட்டத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றார்.


Related Tags :
Next Story