குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்களநீர் பயிற்சி முகாம்
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் களநீர் பயிற்சி முகாம் கோலியனூரில் நடைபெற்றது.
கோலியனூர்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தகவல் தொடர்பு திறன் மேம்பாட்டு பிரிவு ஜல்ஜீவன் மிஷன் சார்பில் ஊராட்சியில் உள்ள குடிநீர் சுகாதாரக்குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகியோருக்கு களநீர் பயிற்சி முகாம் கோலியனூரில் நடைபெற்றது. முகாமிற்கு கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி முன்னிலை வகித்தார். குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப்பொறியாளர் அன்பழகன், உதவி நிர்வாகப்பொறியாளர் ஆனந்தன், உதவி பொறியாளர் சிவசங்கரன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இம்முகாமில் கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் களநீர் பரிசோதனை பெட்டி வழங்கப்பட்டு அதனை பயன்படுத்தி நீரின் தரத்தை பரிசோதிப்பது மற்றும் வேதிவினைகளின் அளவுகள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்களும் நீரின் பகுப்பாய்வாளர்களான சங்கர், உதயசூர்யா ஆகியோர் விளக்கினார்கள்.