மேலநீலிதநல்லூரில் களநீர் பயிற்சி முகாம்


மேலநீலிதநல்லூரில் களநீர் பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

மேலநீலிதநல்லூரில் களநீர் பயிற்சி முகாம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே மேல நீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஜல்ஜீவன் மிஷின் சார்பாக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோபால், உதவி நிர்வாக பொறியாளர் ஆதிநாராயணன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் களநீர் பயிற்சி முகாம் நடைபெற்றது. யூனியன் தலைவி மாதவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள் முன்னிலை வகித்தார்.

இப்பயிற்சி யூனியனில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் உள்ள கிராம குடிநீர் சுகாதார உறுப்பினர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குழுவின் செயல்பாடு, ஜல்ஜீவன் மிஷின் நோக்கம், நீரின் அவசியம் குறித்து தெளிவாக விளக்கிக் கூறப்பட்டது. பயிற்சியின் போது களநீர் பரிசோதனை எவ்வாறு செய்வது என்பது பற்றி ராஜேஸ்வரி கூறினார். மேலும் வெங்கடேசன், சுகுமாரன், தனசேகரன், சடையாண்டி, முருகன், ராஜேஸ்வரி, மீனாட்சி ஆகியோர் நீரின் அவசியத்தை பற்றி பயிற்சி அளித்தனர். பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.


Next Story