மின்வாரிய அலுவலகத்தில் தொழிலாளி வாக்குவாதம்


மின்வாரிய அலுவலகத்தில் தொழிலாளி வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். கூலித்தொழிலாளி. இவர் நேற்று ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார். அங்கு நான் மின்சாரம் அதிகளவில் பயன்படுத்துவதில்லை. ஆனால் எனது வீட்டுக்கு ரூ.200 மின்கட்டணம் வந்துள்ளது என்று அலுவலர்களிடம் கேட்டார். அப்போது கொரோனா காலத்தில் மின் கணக்கீடு செய்யப்படவில்லை. அது தான் தற்போது கணக்கிடப்பட்டதாக தெரிவித்தனர். இதனால் அவர் அங்கிருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story