ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது - ஐகோர்ட்டு


ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது - ஐகோர்ட்டு
x

ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது என ஐகோர்ட்டு கூறியுள்ளது.

சென்னை,

இந்தியா வந்த இலங்கை அதிபருக்கு எதிராக சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்தனர். இதுகுறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றப்பத்திரிகையை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் 11 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மாணவர்கள் ஜனநாயக ரீதியாக மட்டுமே போரட்டத்தில் ஈடுப்பட்டனர். வன்முறையில் எதிலும் ஈடுபடவில்லை" என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என். சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது. எனவே, மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்கிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story