ரெயில் நிலையத்தில் சினிமா படபிடிப்பு
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சினிமா படபிடிப்பு நடைபெற்றது.
ராணிப்பேட்டை
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இயக்குனரும், நடிகர்களுமான பாக்கியராஜ், பாண்டியராஜன் ஆகியோரின் மகன்கள் நடிக்கும் புதிய படத்தின் சினிமா படபிடிப்பு நடைபெற்று வருகிறது.
ரெயில் நிலையத்தில் படப்பிடிப்பை காண்பதற்காகவும், அந்த வழியாக ரெயில் பயணிகள் வராமல் இருக்கவும் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
நீலம் புரரெக்ஷன் தயாரிப்பில் டைரக்டர் ஜெயகுமார் இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அங்கிருந்த பட குழுவினர் தெரிவித்தனர்.
இதனால் அரக்கோணம் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story