உடுமலையில் கழிவு நீர் கால்வாயில் மோட்டார்சைக்கிளுடன் விழுந்த நிதி நிறுவன அதிபர் பலியானார்.

உடுமலையில் கழிவு நீர் கால்வாயில் மோட்டார்சைக்கிளுடன் விழுந்த நிதி நிறுவன அதிபர் பலியானார்.
x

உடுமலையில் கழிவு நீர் கால்வாயில் மோட்டார்சைக்கிளுடன் விழுந்த நிதி நிறுவன அதிபர் பலியானார்.

திருப்பூர்

போடிப்பட்டி,

உடுமலையில் கழிவு நீர் கால்வாயில் மோட்டார்சைக்கிளுடன் விழுந்த நிதி நிறுவன அதிபர் பலியானார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நிதி நிறுவன அதிபர்

உடுமலை சங்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் இரவு உடுமலை-பழனி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கழுத்தறுத்தான் பள்ளம் அருகில் மோட்டார்சைக்கிள் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கால்வாயின் திட்டில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளுடன் பழனிச்சாமி உள்ளே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

பலி

இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனிச்சாமியை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story