நிதி உதவி


நிதி உதவி
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவலர் குடும்பத்துக்கு நிதிஉதவி வழங்கப்பட்டது

தென்காசி

கடையநல்லூர்:

தமிழக காவல்துறையில் 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிடும்போது அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை காக்கும் நல்லெண்ணத்தோடு அதே 2013-ம் ஆண்டு பேட்ச் போலீசார் சமூக வலைதளமாகிய வாட்ஸ்-அப் போன்றவை மூலம் ஒன்றிணைந்து நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா காரிசாத்தான் கிராமத்தை சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் குருசாமியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்தை உதவிதொகையாக வழங்கினர். குருசாமியின் குடும்பத்திற்கு நேரில் சென்று இந்த தொகையை கொடுத்தனர்.

இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் இறந்த காமேஷ்குமாரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும், தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்தில் இறந்த வேலுவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் நிதி உதவியையும் வழங்கினர்.


Next Story