சிறுவனின் சிகிச்சைக்கு நிதி உதவி


சிறுவனின் சிகிச்சைக்கு நிதி உதவி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:31+05:30)

சிறுவனின் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே உள்ள மேலராஜகோபாலபேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மகன் தமிழ்செல்வன் (வயது 12). இந்த சிறுவன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இந்தநிலையில் குருசாமி, தனக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பணம் இல்லை, எனவே மகன் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும் என தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து சிவ பத்மநாதன் அந்த சிறுவனிடம் நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் பேசி, மேல் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்தார்.

அப்போது கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை கீழப்பாவூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.Next Story