பெண் போலீஸ் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நிதி உதவி


பெண் போலீஸ் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நிதி உதவி
x

உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த பெண் போலீஸ் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட காவலூர் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்த முதல் நிலை பெண் காவலர் லட்சுமி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நிலை சரி இல்லாமல் மரணமடைந்தார். தமிழ்நாடு முழுவதும் 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்று சேர்ந்து தங்களது பேட்ஜ் காவலர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு பணம் வழங்கி வருகிறார்கள்.

அதன்படி, இறந்த பெண் காவலர் லட்சுமியின் 3 ஆண் பிள்ளைகளும் பயன் பெறும் வகையில் அவர்கள் பெயரில் தொகைகளை ஆலங்காயத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடன் பணியாற்றிய போலீசார் வழங்கினர்.

ஏற்கனவே அவர் உடல் நிலை சரி இல்லாமல் இருந்த போது மாவட்டம் முழுவதும் உள்ள காவலர்கள் ரூ.2 லட்சம் வழங்கி இருந்தார்கள். தற்போது ரூ.24 லட்சத்து 25 ஆயிரத்து 703-ஐ இறந்து போன பெண் காவலர் லட்சுமியின் மகன்களிடம் வழங்கினர். முன்னதாக அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பெண் போலீஸ் லட்சுமி படத்திற்கு போலீசார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


Next Story