தபால் தலை சேகரிக்க மாணவர்களுக்கு நிதி உதவி


தபால் தலை சேகரிக்க மாணவர்களுக்கு நிதி உதவி
x

தபால் தலை சேகரிக்க மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என நாகை தபால் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) பசுபதி கூறி உள்ளார்.

நாகப்பட்டினம்


தபால் தலை சேகரிக்க மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என நாகை தபால் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) பசுபதி கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தபால் தலை

பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனுக்காகவும் தபால் தலை சேகரிப்போர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் 'தீன் தயாள் ஸ்பார்ஷ்' என்ற நாடு தழுவிய பள்ளி மாணவர்களுக்கான உதவி தொகைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இதன் மூலம் தபால் தலை சேகரிப்பு பழக்கம் மற்றும் அது பற்றிய ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக உதவி தொகையும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தபால்தலை சேகரிக்க ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

வினாடி-வினா போட்டி

இந்த உதவித்தொகையை பெறுவதற்கான முதல் நிலை தபால் தலை வினாடி - வினா போட்டி தேர்வு நாகை அஞ்சல் கோட்டத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உதவி கண்காணிப்பாளர்கள் மதுபாலா, கார்த்திகேயன், காரைக்கால் உபகோட்ட ஆய்வாளர் வினோத் ஆகியோர் செய்து இருந்தனர். இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story