சென்னை சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் இன்று (8-9-2023) மாலைஎதிர்பாராதவிதமாக நடந்த சாலை விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், காவனூர்புதுச்சேரி,கம்மாளம்பூண்டியைச் சேர்ந்த கௌரி (வயது 60) என்பவர் உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த கௌரி அவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story