பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவி
சேலம்
சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி உயிரிழந்தவர்களது குடும்பத்துக்கும், காயம் அடைந்தவர்களது குடும்பத்துக்கும் அரசு சார்பில் நிதி உதவியை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மணி, கண்காணிப்பாளர் தனபால் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story