உரிமம் இன்றி இயங்கிய 2 தனியார் கழிவு நீர் வாகனங்களுக்கு அபராதம்


உரிமம் இன்றி இயங்கிய 2 தனியார் கழிவு நீர் வாகனங்களுக்கு அபராதம்
x

தஞ்சையில் உரிமம் இன்றி இயங்கிய 2 தனியார் கழிவு நீர் வாகனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் உரிமம் இன்றி இயங்கிய 2 தனியார் கழிவு நீர் வாகனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஆய்வு

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்று வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பான முறையில் கழிவுநீர் தொட்டி அடைப்பை சரிசெய்யும் கழிவு நீர் வாகனங்கள் குறித்து ஆய்வு தஞ்சை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.இதில் மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன் மற்றும் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு கழிவு நீர் வாகனங்களின் உரிமம் மற்றும் ஜி.பி.எஸ். வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 13 கழிவு நீர் வாகனங்கள் உரிமம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

தலா ரூ.25 ஆயிரம் அபராதம்

இதைத்தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது 2 தனியார் கழிவு நீர் வாகனங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வந்ததை கண்டறிந்து, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து கழிவு நீர் வாகனங்களில் கழிவு நீர் அகற்றும் சேவைக்கான தேசிய உதவி சேவை எண்: 14420 மற்றும் தஞ்சை மாநகராட்சிக்கென பிரத்யேகமான தொலைபேசி எண் 04362-231021 என்ற எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியை துப்புரவு ஆய்வாளர் பொன்னர், ஜோசப் சேவியர் மற்றும் தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் ஆகியோர் ஒருங்கிணைத்து இருந்தனர்.


Next Story