கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பயிர்கள் சேதம்


கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பயிர்கள் சேதம்
x

மடத்துக்குளத்தில் கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பயிர்கள், சொட்டுநீர் பாசன குழாய்கள் சேதம் அடைந்தன.

திருப்பூர்

மடத்துக்குளம்

மடத்துக்குளத்தில் கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பயிர்கள், சொட்டுநீர் பாசன குழாய்கள் சேதம் அடைந்தன.

கரும்பு தோட்டம்

மடத்துக்குளம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி நடந்துள்ளது. தற்போது அறுவடை பருவத்தில் இந்த பயிர்கள் உள்ளன. சர்க்கரை ஆலைக்கும், தனியார் ஆலையில் வெல்லம் தயாரிப்புக்கும் கரும்புகள் வெட்டி அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் அதிக வெப்பம் மற்றும் சில காரணங்களால் இந்த பயிர்களில் தீ விபத்து ஏற்படுகிறது.

ரெட்டியாபாளையம் பகுதியை சேர்ந்த பூங்கோதை என்பவர் விளை நிலத்தில் 3½ ஏக்கர் கரும்பு பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்தப் பயிர்கள் 12 மாதங்களைக் கடந்து வளர்ந்திருந்தன. இதனால் அறுவடை செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன.

தீ விபத்து

இந்த நிலையில் நேற்று மதியம் இந்த கரும்பு பயிர்களில் திடீரென தீப்பற்றியது. அருகில் இருந்தவர்கள் அணைக்க முயற்சி செய்தும் தீ பரவி எரியத் தொடங்கியது. இதனால் உடனடியாக உடுமலையில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட விவசாயி கூறுகையில், "கரும்பு பயிர்கள் முழுவதும் எரிந்து விட்டன. இதனால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர விளை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சொட்டு நீர் பாசன குழாய்கள் அனைத்தும் தீயில் எரிந்து விட்டது" என்றார்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், "உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் அருகிலுள்ள விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்" என தெரிவித்தனர்.


Related Tags :
Next Story