பஞ்சு நிறுவனத்தில் தீ விபத்து
பஞ்சு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை அவனியாபுரத்தை அடுத்த வைக்கம் பெரியார் நகர் சாலையில் வீடு துடைக்கும் பஞ்சு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலையில் அந்த நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அலுவலர் கந்தசாமி தலை மையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பி லான பொருட்கள் எரிந்து நாசம் ஆயிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஊழியர்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.