நூல் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து


நூல் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நூல் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே ஆவரம்பட்டியை சேர்ந்த சங்கர் மற்றும் நந்தா சகோதரர்கள், கம்மாபட்டி பகுதியில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகின்றனர். நேற்று பிற்பகலில் ஆலைக்கு வரும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. மீண்டும் மின் இணைப்பு கிடைத்த போது, அதிக மின் அழுத்தம் காரணமாக புளூரூம் பகுதியில் இயங்கி வந்த எந்திரத்தில் இருந்து ஒரு பகுதியில் பற்றிய தீ அறை முழுவதும் வேகமாக பரவியது. ஆலை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு துறை மீட்பு குழுவினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு பொதிகள் மற்றும் எந்திர பாகங்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story