வனப்பகுதியில் திடீர் தீ


வனப்பகுதியில் திடீர் தீ
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகர் வனப்பகுதியில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று மதியம் வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது. இதனால் மரங்கள், செடிகள், கொடிகள் உள்ளிட்டவை பற்றி எரிந்தன. இதுகுறித்த தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ரகுபதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், மரக்கிளைகளை கொண்டும் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி புகை மூட்டமாக காட்சி அளித்தது. தீ விபத்து தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story