பஞ்சுமில்லில் பயங்கர தீ விபத்து


பஞ்சுமில்லில் பயங்கர தீ விபத்து
x

திருப்பூர் அருகே பஞ்சுமில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் எரிந்து நாசமானது.

திருப்பூர்

திருப்பூர் அருகே பஞ்சுமில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் எரிந்து நாசமானது.

பஞ்சு மில்

திருப்பூர் அருகே மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுரபீக். இவர் பூமலூர் பிரிவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் பனியன் வேஸ்டை பஞ்சாக அரைக்கும் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் நேற்று வடமாநில தொழிலாளர்கள் 8 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மதியம் 1.45 மணிக்கு அங்குள்ள எந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டு தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து பஞ்சு மில் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் தீயணைப்பு கருவி மூலமும், தண்ணீர் ஊற்றியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

எந்திரங்கள் சேதம்

தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம் போலீசாரும், அதிகாரி முத்துக்குமாரசாமி தலைமையிலான பல்லடம் தீயணைப்பு படையினர் 5 பேரும் பஞ்சுமில்லில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள், பஞ்சுகள் தீக்கிரையானதாக பஞ்சுமில் உரிமையாளர் தெரிவித்தார்.

இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Related Tags :
Next Story